

லண்டன்,
மகளிருக்கான 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் குரூப்-1 பிரிவை சேர்ந்த இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் பபெட் டிலீட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் இந்திய அணி அதிரடியாகி விளையாடியது. ஸ்மிருதி மந்தனா, ஷாபாலி வர்மா, இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். ஸ்மிருதி மந்தனா 74 ரன்களும், ஷாபாலி வர்மா 55 ரன்களும் எடுத்து ஆட்ட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.