டி20 உலகக் கோப்பை; அவர்கள் கண்டிப்பாக அணியில் இருப்பார்கள் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர்


டி20 உலகக் கோப்பை;  அவர்கள் கண்டிப்பாக அணியில் இருப்பார்கள் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர்
x

இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

சிட்னி,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் கம்மின்ஸ், ஹேசில்வுட், டிம் டேவிட் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.3 பேரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என கூறப்பட்டது.

இது தொடர்பாக பேட்டி அளித்த ஆஸ்திரேலிய அணியின் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியதாவது,

அவர்கள் 3 பேரும் காயத்தில் இருந்தாலும் விரைவில் அறிவிக்கப்பட உள்ள டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறுவார்கள். டி20 உலகக் கோப்பை நெருங்கும்போது அவர்களின் உடற்தகுதியை பொறுத்து விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும். என தெரிவித்தார்.

1 More update

Next Story