

மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. இந்நிலையில் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கி உள்ளது.
முதலாவது அரையிறுதி மார்ச் 4 ஆம் தேதியும் இரண்டாவது அரையிறுதி மார்ச் 5 ஆம் தேதியும், இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்பதால் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணி தகுதி நிலையைப் பொறுத்து மைதானங்கள் மாறும். டிக்கெட் வாங்கிய மைதானத்தில் போட்டி நடைபெறவில்லை என்றால், அதற்கான தொகை திருப்பித் தரப்படும்.