டி20 உலகக் கோப்பை - இன்றைய லீக் ஆட்டங்கள்

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
டி20 உலகக் கோப்பை - இன்றைய லீக் ஆட்டங்கள்
Published on

சென்னை,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இலங்கையின் கொழும்பில் காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களின் பிரிவில் முன்னேற்றம் பெற இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகின்றன.

Also Read
மார்க்கஸ் ஸ்டாய்னிசுக்கு காயம்: ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கல்
டி20 உலகக் கோப்பை - இன்றைய லீக் ஆட்டங்கள்

அதேபோல், கொல்கத்தாவில் மதியம் 3 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com