டி20 உலகக்கோப்பை தொடர்: எந்தெந்த பிரிவில் எந்தெந்த அணிகள்? - விவரம்

20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 உலகக்கோப்பை தொடர்: எந்தெந்த பிரிவில் எந்தெந்த அணிகள்? - விவரம்
Published on

மும்பை,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. போட்டிகள் இந்தியாவில் அகமதாபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களிலும், இலங்கையின் கொழும்பு, பல்லேகல்லேயிலும் நடைபெற உள்ளன. இந்த தொடரில் எந்தெந்த பிரிவில் எந்தெந்த அணிகள் இடம்பெற்றுள்ளது என்ற விபரங்கள் பின்வருமாறு;

மொத்தம் 55 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற முன்னணி அணிகளுடன், அமெரிக்கா, கனடா, நேபாளம், ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளும் களமிறங்குகின்றன. இந்த உலகக்கோப்பையில் இத்தாலி அணி முதன்முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்
டி20 உலகக்கோப்பை தொடர்: எந்தெந்த பிரிவில் எந்தெந்த அணிகள்? - விவரம்

20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் வீதம் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

குரூப் A: இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, அமெரிக்கா, நெதர்லாந்து

குரூப் B: ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே

குரூப் C: இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்

குரூப் D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, சௌத் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர் 8 சுற்றில் தகுதி பெற்ற 8 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. அந்த குழுவில் உள்ள ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதியில் வெற்றி பெறும் இரண்டு அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com