டி20 உலகக்கோப்பை: நமீபியாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி

அமெரிக்க அணி 20 ஓவர்களில் விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை: நமீபியாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - நமீபியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலி பேட்டிங் செய்தது.

தொடக்க பேட்ஸ்மேனும், கேப்டனுமான மோன்யாக் படேல் அரைசதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி அதிரடி காட்டினார். அவர் 33 பந்துகளில் 4பவுண்டரி, 6 சிக்சருடன் ர68 ன்கள் சேர்த்தார். இறுதியில் அமெரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் நமீபியா அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரரான லோரன் ஸ்டீகாம்ப் அரைசதமடித்து, 58 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர். இறுதியில் நமீபிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணி வெற்றி பெற்று அசத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com