டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அமெரிக்கா

அமெரிக்க அணி 20 ஓவர்களில் விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அமெரிக்கா
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் அமெரிக்கா - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலி பேட்டிங் செய்தது.

தொடக்க பேட்ஸ்மேனும், கேப்டனுமான மோன்யாக் படேல் அரைசதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி அதிரடி காட்டினார். அவர் 33 பந்துகளில் 4பவுண்டரி, 6 சிக்சருடன் 68 ரன்கள் சேர்த்தார். இறுதியில் அமெரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் நமீபியா அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com