

பெங்களூரு,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்று பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடி ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் விளாசியது. தொடக்க வீரர் குர்பாஸ் 43 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 51 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.