டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி தோல்வி

இங்கிலாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி தோல்வி
Published on

லண்டன்,

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஒரு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரிச்சா கோஷ் மட்டும் அதிரடியாகவும் ஆடி அரை சதம் கடந்தார். இறுதியில், இந்திய அணி 19.5 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசி வரை போராடிய ரிச்சா கோஷ் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com