டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை:  ஸ்காட்லாந்து  அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
Published on

கொல்கத்தா,

டி20 உலகக்கோப்பை தொடர் கொழும்புவில் தொடங்கியுள்ளது. இதன் 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் ரிச்சி பெரிங்க்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஷிம்ரன் ஹெட்மயர் அரைசதமடித்தார். பிரண்டன் கிங் 35 ரன்களும் , ருதர்போர்ட் 26 ரன்களும் ரோவ்மென் பவல் 24 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 182 ரன்கள் எடுத்தது.இதையடுத்து 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோமரியோ ஷெப்பர்டு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com