டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்துக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்துக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
Published on

கொல்கத்தா,

டி20 உலகக்கோப்பை தொடர் கொழும்புவில் தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் -நெதர்லாந்து அணிகள் விளையாடின.இதில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெறும் 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் ரிச்சி பெரிங்க்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக விளையாடிய ஷிம்ரன் ஹெட்மயர் அரைசதமடித்தார். பிரண்டன் கிங் 35 ரன்களும் , ருதர்போர்ட் 26 ரன்களும், ரோவ்மென் பவல் 24 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 182 ரன்கள் எடுத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com