

மும்பை,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன் தினம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கிப்போய் உள்ளது. அதாவது, ரன் ரேட்டில் இந்திய அணி பின் தங்கி உள்ளதால், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து இந்திய அணிக்கு அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு என்ற சூழல் தற்போது உள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5.35 நெட் ரன் ரேட்டுடன் குரூப் 1 புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னேறியுள்ளது.
3.80 நெட் ரன் ரேட்டுடன் தென் ஆப்பிரிக்கா அணி 2 ஆம் இடத்தில் உள்ளது. மைனஸ் 3.80 நெட் ரன் ரேட்டுடன் இந்தியா 3 ஆம் இடத்தில உள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும்.
ஒருவேளை அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். ஆகவே இந்திய அணியின் அரையிறுதி முடிவை தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி தான் முடிவு செய்யும் என்பதால் இந்திய ரசிகர்கள் அந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.