டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் இந்தியா எதிர்கொள்ளும் அணிகள் எவை.?

சூப்பர் 8 சுற்றுக்கு தற்போது வரை 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் இந்தியா எதிர்கொள்ளும் அணிகள் எவை.?
Published on

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ளன. இதற்கிடையே, சூப்பர் 8 சுற்றுக்கு தற்போது வரை 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.

சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குரூப் 1 பிரிவில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகள் உள்ளன. இதன் மூலம் இந்திய அணி, தனது பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளது.

இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 22-ந்தேதியும், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 26-ந்தேதியும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மார்ச் 1-ந்தேதியும் மோத உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com