டி20 உலகக்கோப்பை: இந்தியா 2-வது வெற்றியை ருசிக்குமா இந்தியா? - நமிபியாவுடன் இன்று மோதல்

இந்தியா தனது 2-வது லீக்கில் நமிபியாவை இன்று (வியாழக்கிழமை) சந்திக்கிறது.
டி20 உலகக்கோப்பை: இந்தியா 2-வது வெற்றியை ருசிக்குமா இந்தியா? - நமிபியாவுடன் இன்று மோதல்
Published on

டெல்லி,

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.

'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 29 ரன் வித்தியாசத்தில் அமெரிக்காவை தோற்கடித்தது. இந்த நிலையில் இந்தியா தனது 2-வது லீக்கில் ஆப்பிரிக்க அணியான நமிபியாவை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்திக்கிறது.

உடல் நலக்குறைவால் தொடக்க ஆட்டத்தில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தீவிர பயிற்சியில் ஈடுபட்டதால், அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. அதே சமயம் இன்னொரு பின்னடைவாக அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா, வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 2 நாளாக அவர் பயிற்சி மேற்கொள்ளாததால் இந்த ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. மற்றபடி இந்தியா தனது முழு பலத்துடன் நமியாவை போட்டுத்தாக்க தயாராக உள்ளது.

Also Read
20 ஓவர் உலகக் கோப்பை: வங்காளதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஐசிசி
டி20 உலகக்கோப்பை: இந்தியா 2-வது வெற்றியை ருசிக்குமா இந்தியா? - நமிபியாவுடன் இன்று மோதல்

குட்டி அணியான நமிபியா, இந்திய அணிக்கு முடிந்த அளவுக்கு கடும் நெருக்கடி அளிக்க முயற்சிப்பார்கள். நடப்பு தொடரில் சிறிய அணிகள் எல்லாம் திடீரென விசுவரூபம் எடுப்பதால் இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும். இந்திய அணி நமிபியாவுக்கு எதிராக இதுவரை ஒரே ஒரு 20 ஓவர் போட் டியில் விளையாடியுள்ளது. 2021-ம் ஆண்டு உலகக் கோப்பையில் மோதிய அந்த ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் அல்லது வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே அல்லது ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், வருண் சக்ர வர்த்தி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

நமிபியா: லாரென் ஸ்டீன்கேம்ப், ஜன் பிரைலிங், நிகோல் லாப்டி ஈடன், எராஸ்மஸ் (கேப்டன்), ஜெ.ஜெ.சுமித், ஜேன் கிரீன், ரூபன் டிரம்பெல் மேன், டைலன் லீச்செர், வில்லியம் மைபர்க், பெர்னார்ட் சோட்ஸ், மேக்ஸ் ஹென்கோ அல்லது பென் ஷிகோங்கோ.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com