டி20 உலகக் கோப்பை: சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது பெறுவாரா ?

இறுதிப்போட்டி முடிவில் யாருக்கு தொடர்நாயகன் விருது கிடைக்கும் என்பது தெரியவரும்
டி20 உலகக் கோப்பை: சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது பெறுவாரா ?
Published on

ஆமதாபாத்,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கி யது. இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர்8 சுற்று முடிவில் தென்ஆப் பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியை எட்டின. முத லாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை பந்தாடி 2-வது தடவையா கவும், இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையா கவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர் ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் குஜராத் மாநிலம் ஆமதாபாத் தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மோதுகின்றன.

நடப்பு உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருதுக்கான இறுதி பட்டியலில் வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து), சஹிப்சதா பர்ஹான் (பாகிஸ்தான்), லுங்கி இங்கிடி, மார்க்ரம் (இருவரும் தென் ஆப்பிரிக்கா), ரச்சின் ரவீந்திரா, டிம் செய்பெர்ட் (இருவரும் நியூசிலாந்து), வான் சால் விக் (அமெரிக்கா), சஞ்சு சாம்சன் (இந்தியா) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். தங்களுக்கு பிடித்தமான வீரருக்கு ஆன்-லைன் மூலம் ரசிகர் கள் வாக்களித்து வருகிறார்கள். இறுதிப்போட்டி முடிவில் யாருக்கு தொடர்நாயகன் விருது கிடைக்கும் என்பது தெரியவரும். இறுதிப்போட்டி யிலும் சஞ்சு சாம்சனின் சரவெடி ஆட்டம் தொடர்ந்தால் அவருக்கு தொடர் நாயகன் விருது கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com