டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே
Published on

புதுடெல்லி,

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.

தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பி பிரிவில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. கொழும்புவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க பேட்ஸ்மேன்களான பென்னெட் மற்றும் மருமணி இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மருமணி 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பென்னெட் அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ரியான் புரி, தன் பங்குக்கு 35 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டொய்னிஸ், கிரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com