டி20 போட்டி: வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்தது நியூசிலாந்து

பெவோன் ஜேக்கப் 62 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
டி20 போட்டி: வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்தது நியூசிலாந்து
Published on

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இன்று 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. மழை காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

வங்காளதேச அணி 14.2 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹ்ரித்தாய் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

அந்த அணி 11.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. அத்துடன் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. பெவோன் ஜேக்கப் 62 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com