தலீபான்கள் இந்த முறை நல்ல மனநிலையுடன் வந்துள்ளனர்- சாகித் அப்ரிடி நற்சான்று

ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தலீபான்கள் பல்வேறு உறுதி மொழிகளை அளித்தனர்.’
தலீபான்கள் இந்த முறை நல்ல மனநிலையுடன் வந்துள்ளனர்- சாகித் அப்ரிடி நற்சான்று
Published on

இஸ்லாமாபாத்

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டன.

இதற்கிடையில் தலீபான்களின் ஆட்சியின் கீழ் வாழ விரும்பாத ஆப்கானிஸ்தான் மக்களும் நாட்டை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர்.

ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தலீபான்கள் பல்வேறு உறுதி மொழிகளை அளித்தனர்.

மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு போதுமான ஆதரவு தரப்படும் என்று கடந்த வாரம் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பிறகு தலீபான்கள் கூறியிருந்தனர். நிச்சயம் கிரிக்கெட் தடை செய்யப்படாது என்றும் உத்திரவாதம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கூறியதாவது;-

இந்த முறை தலீபான் ஒரு நல்ல (பாசிட்டிவான) மனநிலையுடன் வந்திருக்கிறார்கள். பல்வேறு துறைகளில் பெண்கள் வேலைக்குச் செல்வதை அனுமதிக்கிறார்கள். பெண்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். கிரிக்கெட் பற்றிய அவர்கள் பார்வையும் நன்றாக இருக்கிறது. அவர்கள் கிரிக்கெட்டை ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு கிரிக்கெட்டும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார் அப்ரிடி.

அப்ரிடியின் இந்தப் பேட்டி வைரலாகி உள்ளது. பலரும் இதனை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com