

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் அளித்த ஒரு பேட் டியில் கூறியதாவது,
4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் என்று நம்புகிறேன். தற்போதுள்ள நிலைமையில் இருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் அது மிகச்சிறந்த ஒன்றாக இருக்கும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் நமது அணியினர் சற்று (53.33 சதவீத புள்ளியுடன் 5-வது இடம்) பின்தங்கியுள்ளனர். ஆனால் இந்திய அணியிடம் உள்ள திறமையை பார்க்கும் போது, எந்த நிலையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளனர். இது இறுதி சுற்றை அடைவதற்கான முதற்படி கட்டு.
அக்டோபர், நவம்பரில் இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடரில் (இரு போட்டி) ஆடுகிறது. நியூசிலாந்துக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் விளையாடுவது எப்போதும் சவாலானது. அவர்கள் மிகவும் கடினமான ஒரு அணி. அதுவும் உள்ளூரில் எப்போதும் நன்றாக விளையாடக்கூடியவர்கள். தற்போது இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் பலரும் நியூசிலாந்து மண்ணில் விளையாடியதில்லை. அதனால் நியூசிலாந்து தொடர் மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது.
அடுத்த இரு மாதங்களில் நமது வீரர்கள் உடல்தகுதியை நன்கு பராமரித்து. காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். விராட் கோலி, ரோகித் சர்மா, அஜிங்யா ரஹானே, புஜாரா போன்ற அனுபவ வீரர்களின் பங்களிப்பு இப்போது இல்லை. கடந்த முறை இந்திய அணி அங்கு சென்ற போது இவர்களெல்லாம் இருந்தனர். எனவே இளம் வீரர்கள் எப்படி விளையாடப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும்.
ஜனவரி, பிப்ரவரியில் நடக்க உள்ள இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட்