

புதுடெல்லி,
2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த கொண்டாட்டம் குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறுகையில், அன்று நான் சச்சின் தெண்டுல்கர் நடனமாடுவதை முதல் முறையாக பார்த்தேன்.
அவர் முதல் முறையாக தன்னை சுற்றி இருப்பவர்கள் யார்? என்பது பற்றி கவலைப்படாமல் எல்லோருடனும் இணைந்து ஆடி மகிழ்ச்சியை அனுபவித்தார். அதனை நான் எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன் என்றார்.