தெண்டுல்கரை சீண்டினேன்; மன்னிப்பு கேட்டேன் - சக்லைன் முஷ்டாக் நெகிழ்ச்சி

தெண்டுல்கரை சீண்டினேன், அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்று சக்லைன் முஷ்டாக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தெண்டுல்கரை சீண்டினேன்; மன்னிப்பு கேட்டேன் - சக்லைன் முஷ்டாக் நெகிழ்ச்சி
Published on

லாகூர்,

இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் பிறந்த நாளையொட்டி அவருடன் நடந்த ஒரு சம்பவத்தை பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் நேற்று நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது:-

1997-ம் ஆண்டு கனடாவில் நடந்த சஹாரா கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது புதிய யுக்தியின் ஒரு பகுதியாக சச்சின் தெண்டுல்கரை நான் வேண்டுமென்றே முதல்முறையாக சீண்டினேன். அதற்கு தெண்டுல்கர் என்னிடம் அமைதியாக வந்து, நான் உங்களிடம் ஒரு போதும் தவறாக நடந்ததில்லை. பிறகு ஏன் நீங்கள் என்னிடம் தேவையின்றி வம்பு செய்கிறீர்கள் என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்டதும் எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மேலும் அவர், ஒரு மனிதராகவும், வீரராகவும் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன் என்றும் கூறினார். அது எனது மனதை மேலும் உலுக்கியது. அதன் பிறகு நான் அவரை ஒரு போதும் வசைபாடியது இல்லை. அந்த ஆட்டம் முடிந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

இவ்வாறு சக்லைன் முஷ்டாக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com