

மும்பை,
ஐ.பி.எல். போட்டி முடிந்ததும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நியூசண்டிகாரில் அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் முறையே தர்மசாலாவில் ஜூன் 14-ந் தேதியும், லக்னோவில் 17-ந் தேதியும், சென்னையில் 20-ந் தேதியும் நடக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.