

சிட்னி,
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் காஷ்வீ கௌதம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.