

டப்ளின்,
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று பெல்பாஸ்டில் தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறியது. இருப்பினும் ரச்சின் ரவீந்திரா, டாம் பிளெண்டல் ஜோடி பொறுப்புடன் ஆடிரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.சிறப்பாக விளையாடிய டாம் பிளெண்டெல் 186 ரன்னில் வெளியேறினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாக்ஸ்கிராப்ட் 98 ரன்னில் அவுட்டானார்.இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 490 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அயர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அயர்லாந்து அணியில் மெக்பிரைன் 73 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணியில் நாதன் ஸ்மித் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து நியூசிலாந்து அணி பாலோ-ஆன் வழங்கியது. இதனால் அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.