டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 73 ரன்கள் சேர்ப்பு

முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 73 ரன்கள் சேர்ப்பு
Published on

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான இடத்தில் மோதுவது இதுவே முதல் நிகழ்வாகும்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக கவாஜா , வார்னர் களமிறங்கினர். தொடக்கத்தில் சிராஜ் பந்துவீச்சில் கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

பின்னர் லபுசேன் களம் புகுந்தார். அவர் டேவிட் வார்னருடன் இணைந்து சிறப்பாக ஆடினார். இருவரும் நிலைத்து ஆடினர்.

உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் வார்னர் 4 பவுண்டரிகளை பறக்க விட்டார். தொடர்ந்து அவர் ஷரத்துல் தாக்கூர் பந்துவீச்சில் 43 ரன்களில் வெளியேறினார்.

முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com