டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி: ஆஸி.அணியை சரமாரியாக விளாசிய முன்னாள் வீரர்


டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி: ஆஸி.அணியை சரமாரியாக விளாசிய முன்னாள் வீரர்
x
தினத்தந்தி 15 Jun 2025 6:28 PM IST (Updated: 16 Jun 2025 2:12 PM IST)
t-max-icont-min-icon

3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது.

சிட்னி,

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன.

பின்னர் 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 207 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 282 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 83.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 136 ரன்களும், கேப்டன் பவுமா 66 ரன்களும் அடித்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் இந்த தோல்வியின் காரணமாக ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் மிட்செல் ஜான்சன் கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இனி ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் மற்றும் ஹேசல்வுட் ஆகிய நால்வரையும் வெற்றிகரமான கூட்டணி என யாரும் சொல்லக்கூடாது. சமீபகாலமாகவே ஹேசல்வுட் உடற்தகுதி இன்றி அடிக்கடி காயத்தில் சிக்கி வருவதை நாம் பார்த்துள்ளோம். இந்நிலையில் அவர் தேசிய அணிக்காக முக்கியத்துவம் கொடுக்காமல் ஐ.பி.எல். தொடருக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்.

இனி எதிர்காலத்தை நோக்கி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தை ஏற்றுக்கொண்டு, அடுத்த டெஸ்ட் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் நம்பிக்கையை வளர்ப்பது மிகவும் முக்கியம். சாம் கான்ஸ்டாஸ், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் போன்ற வீரர்கள் வித்தியாசமான மனநிலையைக் கொண்டுள்ளனர். வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு முறையும் தங்களை நிரூபிக்க அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இதேபோன்று கிரீன் இறுதிப்போட்டியில் மொத்தமாகவே 5 பந்துகளைதான் அவர் எதிர்கொண்டு 4 ரன்கள் மட்டுமே அடித்தார். எனவே 3-வது வரிசைக்கு அவர் சரியாக வரமாட்டார் என்று நினைக்கின்றேன். இதேபோன்று ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் சரிவுக்கு காரணம் மார்னஸ் சரியாக விளையாடாமல் இருப்பது தான். இதே போன்று ஸ்மித் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரராக களமிறங்கி தடுமாறி வருகிறார்" என்று கூறினார்.

1 More update

Next Story