டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ஏற்றம் கண்ட இந்திய வீரர்கள்

Image Courtesy: @ICC
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்களான சிராஜ், கே.எல். ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். அந்த வகையில் பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அதேபோல கே.எல். ராகுல் 4 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஜோ ரூட் தொடர்கிறார். இதை தவிர பெரிய அளவில் எந்த மாற்றம் இல்லை. அடுத்ததாக பந்து வீச்சில் இந்திய அணி வீரர் முகமது சிராஜ் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் பும்ரா தொடர்கிறார். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. ஆல்ரவுண்டகள் பட்டியலில் யாரும் நெருங்க முடியாத முதல் இடத்தில் ஜடேஜா உள்ளார். இந்த பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிடித்துள்ளார்.






