டெஸ்ட் கிரிக்கெட்: சாய் சுதர்சன், ஜுரேல் சதம்.. இந்திய ஏ அணி 452 ரன்கள் குவிப்பு

இந்திய அணி, 11.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 452 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
டெஸ்ட் கிரிக்கெட்: சாய் சுதர்சன், ஜுரேல் சதம்.. இந்திய ஏ அணி 452 ரன்கள் குவிப்பு
Published on

கல்லே,

இந்திய ஏ கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஏ அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் கல்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 11.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 452 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரேல் சதமடித்து 141 ரன்களும், சாய் சுதர்சன் 132 ரன்களும் எடுத்து அசத்தினர். ஷேக் ரஷித் 63 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் குனசேகரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com