டெஸ்ட் கிரிக்கெட்: சாய் சுதர்சனின் தடுமாற்றத்திற்கு இதுதான் காரணம் - பார்தீவ் படேல்


டெஸ்ட் கிரிக்கெட்: சாய் சுதர்சனின் தடுமாற்றத்திற்கு இதுதான் காரணம் - பார்தீவ் படேல்
x

கோப்புப்படம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

அகமதாபாத்,

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது இந்திய டெஸ்ட் அணிக்காக தமிழக வீரர் சாய் சர்தார்சன் அறிமுகமானார். இங்கிலாந்து தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு அரைசதம் மட்டுமே அடித்து 23 ரன்கள் சராசரியுடன் 140 ரன்களை மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்தார்.

ஆனாலும் இளம் வீரரான அவருக்கு நீண்ட எதிர்காலம் இருக்கிறது என்பதை கருத்தில் கொண்ட நிர்வாகம் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில்19 பந்துகளை சந்தித்த சாய் சுதர்சன் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவரது தடுமாற்றம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் சாய் சுதர்சன் இப்படி தடுமாறி வருவதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்தீவ் படேல் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, சாய் சுதர்சன் திறமையான வீரர் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவருடைய கால் நகர்வுகள் எல்லாம் அற்புதமாக இருக்கிறது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் சிறப்பாகவே விளையாடுகிறார். இருந்தாலும் அவரது இந்த தடுமாற்றத்திற்கு காரணம் யாதெனில் டெஸ்ட் போட்டிகளில் பெரிய ரன்களை அடித்து தனது மூன்றாம் இடத்தை அவர் உறுதி செய்ய வேண்டும் என்கிற ஒரு அழுத்தத்துடனே விளையாடுகிறார்.

அதனால் தான் அவர் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறுகிறார். தற்போதைக்கு அவர் சிறப்பாக விளையாட வேண்டுமெனில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படி அவர் நிதானமாக விளையாடும் பட்சத்தில் ரன்கள் தானாக வரும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story