இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; சாய் சுதர்சன், கருண் நாயர் உட்பட 6 வீரர்களுக்கு வாய்ப்பு..?


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; சாய் சுதர்சன், கருண் நாயர் உட்பட 6 வீரர்களுக்கு வாய்ப்பு..?
x

Image Courtesy: @IPL / File Image

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25ம் தேதி நிறைவடைகிறது. இந்த தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் ஜூன் மாதம் 20ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய வீரர்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் (விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி, ஐ.பி.எல்.) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 6 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சாய் சுதர்சன் (அறிமுக வீரராக), ஸ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர், ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல், சர்பராஸ் கான் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சாய் சுதர்சனை தவிர்த்து மற்ற 5 வீரர்களும் இந்திய டெஸ்ட் அணிக்காக ஏற்கனவே விளையாடிவர்கள். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மே மாதம் (முதல் அல்லது 2வது வாரம்) அறிவிக்கப்பட உள்ளது.

1 More update

Next Story