இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய முன்னணி வீரர் காயம்..? - வெளியான தகவல்

Image Courtesy: @BCCI
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி தொடங்குகிறது.
கட்டாய வெற்றி என்ற நெருக்கடியில் இந்த போட்டியில் இந்திய அணி களம் காண உள்ளது. இந்த போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் பல மாற்றங்கள் இருக்கும் எனலாம். பல முன்னாள் வீரர்கள் இந்திய பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்நிலையில், பயிற்சியின் போது அர்ஷ்தீப் சிங் இடது கையில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சாய் சுதர்சன் அடித்த பந்தை தடுக்க முற்பட்ட போது காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் இங்கிலாந்து தொடரில் இருந்து விலக உள்ளதாகவும், அவருக்கு பதிலாக அன்சுல் கம்போஜ் அணியில் இணைய உள்ளதாகவும் கூற்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






