Image Courtesy: usman_khawajy
Image Courtesy: usman_khawajy

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: விமானத்தை தவறவிட்ட கவாஜா... காரணம் என்ன...?

4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இன்று இந்தியா வருகிறது.
Published on

பெங்களூர்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இன்றுடன் நியூசிலாந்து தொடர் முடிவடைகிறது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி 'ஒயிட் வாஷ்' செய்தது. மூன்று 20 ஓவர் போட்டியில் இதுவரை நடந்த 2 ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.

அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது. 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இன்று இந்தியா வருகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி வீரர்கள் பெங்களூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாட வில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இந்த அணியுடன் வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு இந்திய விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தனது இண்ஸ்டாகிராம் பதிவில்,

எனது இந்திய விசாவுக்காக நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

உஸ்மான் கவாஜாவுக்கு இந்தியா விசா இன்று கிடைத்துவிடும் எனவும், உஸ்மான் நாளை ஒரு விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com