இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .
Image : AFP 
Image : AFP 
Published on

கேப்டவுன்,

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .

தென் ஆப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா , டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்ஸி, டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வேரின் . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com