டெஸ்ட் தொடர்; காயம் காரணமாக விலகிய நாதன் ஸ்மித்.... மாற்று வீரரை அறிவித்த நியூசிலாந்து


டெஸ்ட் தொடர்; காயம் காரணமாக விலகிய நாதன் ஸ்மித்.... மாற்று வீரரை அறிவித்த நியூசிலாந்து
x

Image : @BLACKCAPS

தினத்தந்தி 3 Aug 2025 8:45 PM IST (Updated: 3 Aug 2025 8:46 PM IST)
t-max-icont-min-icon

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண் ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

வெல்லிங்டன்,

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் நாதன் ஸ்மித் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியின் போது நாதன் ஸ்மித் வயிற்று பகுதியில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த காயம் குணமடைய 4 வாரங்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் நாதன் ஸ்மித் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஜாக் பவுல்க்ஸ் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story