

சென்னை,
சின்ன தல ரெய்னாவுக்கு நன்றி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெகிழ்ந்துள்ளது. அனைத்து விதமான போட்டிகளில் இருந்து விடைபெற்ற ரெய்னா, உறுதுணையாக இருந்த சென்னை அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதற்கு மிஸ்டர் ஐபிஎல்-க்கு நன்றி என பாராட்டி நெகிழ்ந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், வரலாற்றில் பல சாதனைகள் நிகழ்ந்த போது உடன் இருந்தவர் ரெய்னா எனவும், அந்த சாதனைகளை நிகழ்த்தியவரும் இவர் தான் எனவும் புகழ்ந்துள்ளது.