’அதனால்தான் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன்’ - ஜடேஜா உருக்கம்

சென்னைக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜா மைதானத்தில் எமோஷனலாகி கண்கலங்கினார்.
’அதனால்தான் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன்’ - ஜடேஜா உருக்கம்
Published on

கவுகாத்தி,

கவுகாத்தியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, ரவீந்திர ஜடேஜா மைதானத்தில் எமோஷனலாகி கண்கலங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வளங்களில் வைரலானது.

இந்நிலையில், இப்போட்டிக்கு பின் பேசிய அவர், சிஎஸ்கே அணி உடனான பிரிவு கடினமாக இருந்ததாக கூரினார். அவர் பேசுகையில்,

"சிஎஸ்கே அணி உடனான பிரிவு முதலில் சற்று கடினமாக இருந்தது. ஏனெனில் அந்த அணியுடன் 12-13 வருடங்களாக பயணித்துள்ளேன். அதனால் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன். ஆனால் இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என தேற்றிக் கொண்டேன். நான் முதன்முதலில் கோப்பை வென்ற அணிக்கே மீண்டும் திரும்புவதுதான் இதில் நல்ல விஷயம்!” என்றார்.

Also Read
3 போட்டிகளில் 1103 ரன்கள்... ஆனால் ‘மேன் ஆப் தி மேட்ச்’ பவுலர்களுக்கு - ஐபிஎல்லில் அரிய சம்பவம்
’அதனால்தான் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன்’ - ஜடேஜா உருக்கம்

பல ஆண்டுகளாக சென்னை அணியின் முக்கிய வீரராகவும், ரசிகர்களின் செல்லப் பிள்ளையாகவும் இருந்த ஜடேஜா, இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கியுள்ளார். 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவர், தனது முந்தைய அணியான சென்னைக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசிய ஜடேஜா, 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com