சிக்சருக்கு பறந்த பந்து... அந்தரத்தில் பாய்ந்து அற்புதமாக தடுத்த பேபியன் ஆலன்.. வீடியோ வைரல்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இந்த சம்பவம் நடந்தது.
சிக்சருக்கு பறந்த பந்து... அந்தரத்தில் பாய்ந்து அற்புதமாக தடுத்த பேபியன் ஆலன்.. வீடியோ வைரல்
Published on

ஆன்டிகுவா,

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற (இந்திய நேரப்படி) 9-வது லீக் ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்களும், ஹெட்மேயர் 65 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆன்டிகுவா அணி இம்ரான் தாஹிரின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது. வெறும் 15.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் 128 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த ஆட்டத்தில் கயானா அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை (20-வது ஓவர்) ஸ்பிரிங்கர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ரோமரியோ ஷெப்பர்டு அதனை சிக்சரை நோக்கி அடித்தார். அனைவரும் அந்த பந்து சிக்சருக்கு சென்று விடும் என்று நினைத்தனர்.

ஆனால் எல்லைக்கோட்டில் பீல்டிங் செய்த பேபியன் ஆலன் அந்தரத்தில் பறந்து பந்தை கேட்ச் செய்தார். அத்துடன் கீழே விழுவதற்கு முன் பந்தை எல்லைக்கோட்டிற்கு உள்ளே வீசினார்.  இதனால் 6 ரன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்த்த ஷெப்பர்டுக்கு ஓடி எடுக்கப்பட 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஆலன் அற்புதமாக பீல்டிங் செய்து சிக்சரை தடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com