சிக்சருக்கு பறந்த பந்து... தாவி கேட்ச் பிடித்த ஜேக் பிரேசர் மெக்கர்க்.. வீடியோ வைரல்

image courtesy:twitter
ஐதராபாத் வீரர் அடித்த பந்தை கேட்ச் பிடித்த ஜேக் பிரேசர் மெக்கர்க் வீடியோ வைரலாகி வருகிறது.
விசாகப்பட்டினம்,
ஐ.பி.எல். தொடரில் விசாகப்படினத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி டெல்லி களமிறங்க உள்ளது.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த அனிகேத் வர்மா, குல்தீப் யாதவ் வீசிய பந்தை அதிரடியாக அடித்தார். அது சிக்சருக்கு செல்லும் என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் எல்லைக்கோட்டில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜேக் பிரேசர் மெக்கர்க் தாவி அதனை அருமையாக கேட்ச் பிடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






