தன்னுடன் சேர்ந்து விளையாடிய வீரர்களை வைத்து கம்பீர் உருவாக்கிய சிறந்த ஐ.பி.எல். கனவு அணி

கம்பீர் தேர்வு செய்த அணியில் 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

புதுடெல்லி,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீர் ஐ.பி.எல். தொடரில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்களை வைத்து சிறந்த ஐ.பி.எல். கனவு லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

அதில் தொடக்க ஆட்டக்காரராக கொல்கத்தா அணியில் தன்னுடன் இணைந்து விளையாடிய ராபின் உத்தப்பாவை தேர்ந்தெடுத்துள்ளார். கம்பீர் தேர்வு செய்த அணியில் 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கம்பீர் தேர்வு செய்த சிறந்த ஐ.பி.எல். கனவு 11 அணி பின்வருமாறு:-

கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, சூர்யகுமார் யாதவ், ஜாக் காலிஸ், யூசுப் பதான், ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, டேனியல் வெட்டோரி மற்றும் மோர்னே மோர்கல்.

X

Daily Thanthi
www.dailythanthi.com