சென்னை மெரினா கடற்கரையில் ஐபிஎல் கோப்பையுடன் இரு அணிகளின் கேப்டன்கள்..

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் ஐபிஎல் கோப்பையுடன் இரு அணிகளின் கேப்டன்கள்..
Published on

சென்னை,

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டு ஐதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.இந்நிலையில், கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் , ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோரும் இணைந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுவதால் மெரினா கடற்கரையில் 2 கேப்டன்களும் கோப்பையுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.இது தொடர்பான புகைப்படங்களை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com