வளர்ந்து வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு.. காரணம் என்ன..?


வளர்ந்து வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு.. காரணம் என்ன..?
x

image courtesy:twitter/BCCIWOMEN

இந்த தொடர் வரும் 6-ம் தேதி தொடங்க இருந்தது.

கொழும்பு,

2-வது வளர்ந்து வரும் மகளிர் ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் வருகிற 6-ம் தேதி தொடங்க இருந்தது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், ஹாங்காங் மற்றும் மலேசியா ஆகிய அணிகள் கலந்து கொள்ள இருந்தன.

இந்நிலையில் இந்த தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்கான காரணம் என்னவெனில், இலங்கையில் தற்போது மோசமான வானிலை மற்றும் நிலவுகிறது. அத்துடன் சிக்குன்குனியா காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த சூழலில் வளர்ந்து வரும் மகளிர் ஆசிய கோப்பை தொடரை தற்போது நடத்த முடியாது என்று இலங்கை கிரிக்கெ வாரிய தலைவர் ஷம்மி சில்வா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதன் காரணமாக வீராங்கனைகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த போட்டிக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story