சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான ரியான் பராக்குக்கு தொப்பியை அணிவித்த தந்தை

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @BCCI / @rajasthanroyals
Image Courtesy: @BCCI / @rajasthanroyals
Published on

ஹராரே,

இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் இறங்குகின்றனர். இந்நிலையில் இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன் அறிமுக வீரராக களம் இறங்கும் வீரர்களுக்கு அணியின் தொப்பி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ரியான் பராக்கிற்கு அவரது தந்தை பராக் தாஸ் தொப்பியை அணிவித்தார். இந்திய அணியின் தொப்பியை மகனுக்கு அப்பாவே அணிவித்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com