பெங்களூருவுக்கு எதிரான இறுதிப்போட்டி... ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து

Image Courtesy: @IPL
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன.
அகமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது,
2வது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 87 ரன்கள் விளாசியதை ஐ.பி.எல் தொடரில் எனது மிகச்சிறந்த இன்னிங்சாக கருதுகிறேன். எனது பணி பாதி மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் முழுமை அடையவில்லை.
இறுதிப்போட்டிக்கு எப்படி தயாராகிறோம் என்பது முக்கியம். இந்த சீசனை இங்கிருந்து தான் (அகமதாபாத்) தொடங்கினோம். அதே இடத்தில் இறுதிப்போட்டியில் ஆட உள்ளோம். அதுவே பரவசமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






