தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக்: சதர்ன் பிரேவ் அணியை வீழ்த்திய ஓவல் இன்வின்சிபிள்ஸ்

இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @thehundred
Image Courtesy: @thehundred
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் - ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சதர்ன் பிரேவ் அணி 98 பந்துகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சதர்ன் பிரேவ் தரப்பில் கார்ட்ரைட் 42 ரன் எடுத்தார். ஓவல் இன்வின்சிபிள்ஸ் தரப்பில் ரஷித் கான், சாம் கர்ரன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 134 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 89 பந்துகளில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 134 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com