தி ஹண்ட்ரட் லீக் கிரிக்கெட்: ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியை வீழ்த்திய ஓவல் இன்விசிபிள்ஸ்

Image Courtesy: @thehundred
இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது.
லண்டன்,
இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஓவல் இன்விசிபிள்ஸ் - ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் குவித்தது. ட்ரெண்ட் ராக்கெட்ஸ் தரப்பில் ரூட் 76 ரன்கள் அடித்தார். ஓவல் இன்விசிபிள்ஸ் தரப்பில் டாம் கர்ரன், ரஷித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஓவல் இன்விசிபிள்ஸ் அணி 89 பந்துகளில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஓவல் இன்விசிபிள்ஸ் தரப்பில் ஜோர்டன் காக்ஸ் 58 ரன் எடுத்தார்.
Related Tags :
Next Story






