டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா பயணம்

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது.
Image Courtesy: BCCI Twitter 
Image Courtesy: BCCI Twitter 
Published on

மும்பை,

8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்நிலையில் டி-20 உலக கோப்பையில் பங்கேற்க செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல். சூர்ய குமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 6-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. அங்கு பெர்த் மைதானத்தில் 13-ந்தேதி வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.

இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாலர் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணி இன்னும் மாற்று வீரரை அற்விக்கவில்லை. அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கபடுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பையில் பங்கேற்க இந்திய அணி இன்று மும்மையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com