ஐ.பி.எல். திருவிழா: 10 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யார் - யார்? முழு விவரம் இதோ!

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் வருகிற மே மாதம் 31ந் தேதி வரை நடைபெற உள்ளது.
Image Courtesy: twitter/@IndianPremierLeague
Image Courtesy: twitter/@IndianPremierLeague
Published on

டி20 கிரிக்கெட்டின் உலகில் ரசிகர்களை மிக அதிகமாக கவர்ந்த தொடராக "இந்தியன் பிரீமியர் லீக்" (IPL) திகழ்கிறது. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பிரபலமான லீக், அதன் முதல் சீசனிலிருந்தே உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறுகிய நேரத்தில் அதிரடி ஆட்டம், உலகத் தரமான வீரர்கள், பிரமாண்டமான ஏற்பாடுகள் ஆகியவை காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு உள்ள வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் இந்த தொடர், கோடைகாலத்தின் முக்கியமான விளையாட்டு திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் நடைபெறும் 19வது ஐபிஎல் சீசன் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் திறமையை நிரூபிக்க கடுமையாக போட்டியிடவுள்ளதால், ரசிகர்களுக்கு தினமும் சுவாரஸ்யமான போட்டிகள் காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் உள்ள வீரர்களின் பட்டியல் இதோ:-

1) சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டோனி, சஞ்சு சாம்சன், டிவால்ட் பிரேவிஸ், ஆயுஷ் மாத்ரே, கார்த்திக் ஷர்மா, சர்ப்ராஸ் கான், உர்வில் பட்டேல், ஜாமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், பிரசாந்த் வீர், மேத்யூ ஷார்ட், அமன் கான், ஜாக் போக்ஸ், ஷிவம் துபே, கலீல் அகமது, நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி, ஸ்ரேயாஸ் கோபால், குர்ஜப்னீத் சிங், அகீல் ஹூசைன், மேட் ஹென்றி, ராகுல் சாஹர், ஸ்பென்சர் ஜான்சன்.

2) டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஷர் பட்டேல் (கேப்டன்), லோகேஷ் ராகுல், கருண் நாயர், டேவிட் மில்லர், பதும் நிசாங்கா, சஹில் பராக், பிரித்வி ஷா, அபிஷேக் போரல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், திரிபுரனா விஜய், மாதவ் திவாரி, நிதிஷ் ராணா, மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா, ஆகிப் நபி, லுங்கி இங்கிடி, கைல் ஜாமிசன், குல்தீப் யாதவ்.

3) குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், டாம் பான்டன், கிளென் பிலிப்ஸ், சாய் சுதர்சன், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், முகமது அர்ஷத் கான், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், ஜாசன் ஹோல்டர், ராகுல் திவேதியா, ஷாருக்கான், ககிசோ ரபடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர், குர்னூர் சிங் பிரார், இஷாந்த் ஷர்மா, அசோக் சர்மா, லுக் வுட், குல்வந்த் கெஜ்ரோலியா, ரஷித் கான்.

4) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்யா ரஹானே (கேப்டன்), ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, மனிஷ் பாண்டே, பின் ஆலென், தேஜஸ்வி சிங், ராகுல் திரிபாதி, டிம் செய்பெர்ட், ரோமன் பவெல், அனுகுல் ராய், கேமரூன் கிரீன், சர்தாக் ரஞ்சன், தக்ஷ் கம்ரா, ரச்சின் ரவீந்திரா, ரமன்தீப் சிங், சுனில் நரின், பிளஸ்சிங் முஜரபானி, வைபவ் அரோரா, மதீஷா பதிரானா, கார்த்திக் தியாகி, பிரசாந்த் சோலங்கி, சவுரப் துபே, நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், வருண் சக்ரவர்த்தி.

5) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: ரிஷப் பண்ட் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ஹிம்மாத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கே, முகுல் சவுத்ரி, அக்ஷத் ரகுவன்ஷி, ஜோஷ் இங்லிஸ், நிகோலஸ் பூரன், மிட் செல் மார்ஷ், அப்துல் சமாத், ஷபாஸ் அகமது, அர்ஷின் குல்கர்னி, வனிந்து ஹசரங்கா, ஆயுஷ் பதோனி, முகமது ஷமி, ஆவேஷ் கான், எம்.சித்தார்த், திக்வேஷ் சிங், ஆகாஷ் சிங், பிரின்ஸ் யாதவ், அர்ஜூன் தெண்டுல்கர், அன்ரிச் நோர்டியா, நமன் திவாரி, மயங்க் யாதவ், மொஷின் கான்.

6) மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ஷெர்பான் ரூதர்போர்டு, ரையான் ரிக்கெல்டன், குயின்டான் டி காக், தனிஷ் மலிவார், திலக் வர்மா, நமன் திர், மிட்செல் சான்ட்னெர், ராஜ் அங்கத் பாவா, அதர்வா அன்கோல்கர், மயங்க் ராவத், கார்பின் பாஷ், வில் ஜாக்ஸ், ஷர்துல் தாக்குர், டிரென்ட் பவுல்ட், மயங்க் மார்கண்டே, தீபக் சாஹர், அஸ்வனி குமார், ரகு ஷர்மா, முகமது இசார், அல்லா கசன்பார், ஜஸ்பிரித் பும்ரா.

7 ) பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, விஷ்ணு வினோத், ஹர்னூர் பன்னு, பைலா அவினாஷ், பிரப்சிம்ரன் சிங், ஷசாங் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், ஹர்பிரீத் பிரார், மார்கோ யான்சென், அஸ்மத்துல்லா ஒமர் ஜாய், பிரியான்ஷ் ஆர்யா, முஷீர் கான், சூர்யான்ஷ் ஷெட்ஜ், மிட்செல் ஓவென், கூப்பர் கனோலி, பென் துவார்ஷூயஸ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், வைஷாக் விஜய்குமார், யாஷ் தாக்குர், சேவியர் பார்லெட், பிரவின் துபே, விஷால் நிஷாத், லோக்கி பெர்குசன்.

8) ராஜஸ்தான் ராயல்ஸ்: ரியான் பராக் (கேப்டன்). சுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, டோனவன் பெரேரா, லுவான் டிரே பிரிட்டோரியஸ், ரவி சிங், அமன் ராவ் பெரலா, ஹெட்மயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல், யுத்விர் சிங் சராக், ரவீந்திர ஜடேஜா, தசுன் ஷனகா, ஜோப்ரா ஆர்ச்சர், துஷர் தேஷ்பாண்டே, கிவெனா மபாகா, ரவி பிஷ்னோய், சுஷாந்த் மிஸ்ரா, யாஷ் ராஜ் பஞ்சா, விக்னேஷ் புத்தூர், பிரிஜேஷ் ஷர்மா, ஆடம் மில்னே, குல்தீப் சென், சந்தீப் ஷர்மா, நன்ரே பர்கர்.

9) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: ரஜத் படிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, ஜோர்டான் காக்ஸ், குருணல் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, ஜேக்கப் பெத் தேல், வெங்கடேஷ் அய்யர், சாத்விக் தேஸ்வால், மங்கேஷ் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், விஹான் மல்கோத்ரா, கனிஷ்க் சவுகான், ஹேசில்வுட், ராசிக் தர், சுயாஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார், நுவான் துஷரா, அபிநந்தன் சிங், ஜேக்கப் டப்பி.

10) சன்ரைசர்ஸ் ஐதராபாத்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), இஷான் கிஷன் (பொறுப்பு கேப்டன்), அனிகெட் வர்மா, சமரன் ரவிச்சந்திரன், சலில் அரோரா, ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் பட்டேல், கமிந்து மென்டிஸ், ஹர்ஷ் துபே, பிரைடன் கார்ஸ், ஷிவாங் குமார், கிரைன்ஸ் புலெட்ரா, லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் பெய்ன், அபிஷேக் ஷர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனட்கட், இஷான் மலிங்கா, சகிப் ஹூசைன், ஓங்கார் தர்மாலே, அமித் குமார், பிரபுல் ஹிங்ஜி, ஷிவம் மாவி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com