

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)
பெங்களூரு அணியில் ஸ்டெயின் சேர்ப்பு
புதுடெல்லி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நிலே காயம் காரணமாக விலகினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினை பெங்களூரு அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்டெயின் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புகிறார். அவர் வருகிற 16-ந் தேதி பெங்களூரு அணியுடன் இணைவார் என்று தெரிகிறது. ஸ்டெயின் ஏற்கனவே 2008 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பெங்களூரு அணிக்காக ஆடியிருந்தது நினைவு கூரத்தக்கது.