

மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு ஜோடி சேர்ந்த தவான் - ராஜபக்சா அதிரடியாக விளையாட தொடங்கினர். ஆனால் இந்த ஜோடி வெகு நேரம் நிலைக்கவில்லை. ராஜபக்சா 9 பந்துகளில் 31 ரன்கள் அடித்து மாவி பந்துவீச்சில் சௌதீ-யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதை தொடர்ந்து ஷிகர் தவான் 16 ரன்களில் சௌதீ பந்துவீச்சில் வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய லிவிங்ஸ்டன் 19 ரன்களில் வெளியேறினார்.
தற்போது வரை பஞ்சாப் அணி 9.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.