தலைகீழாக நின்று அகலப்பந்தை அறிவித்த நடுவர்..!

கிரிக்கெட் நடுவர் ஒருவர் தலைகீழாக நின்று அகலப்பந்தை அறிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தலைகீழாக நின்று அகலப்பந்தை அறிவித்த நடுவர்..!
Published on

மும்பை,

ஒவ்வொரு விளையாட்டிலும் நடுவர்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது. நடுவர்கள் முடிவுகளை சில நொடிகளில் எடுக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு முடிவும் சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், ஒரு தவறான முடிவு மொத்த ஆட்டத்தையும் மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.

கிரிக்கெட் விளையாட்டிலும் நடுவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். சில நடுவர்கள் குறிப்பிடத்தக்க வகையில், தங்களுக்கே உரிய உடல் மொழிகளுடன் தனது முடிவை அறிவிப்பார்கள். நடுவர் பில்லி பவுடன் முடிவுகளை அறிவிக்கும் செய்கைக்கென்றே தனி ரசிகர்கள் உண்டு.

அந்த வகையில், மராட்டிய மாநிலத்தின் கிரிக்கெட் நடுவர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. மராட்டிய மாநிலத்தின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான புரந்தர் பிரீமியர் லீக் போட்டியின் ஒரு ஆட்டத்தில் அகலப் பந்து (Wide Ball) ஒன்றை நடுவர் வித்தியாசமான செய்கை மூலம் அறிவித்தார்.

பொதுவாக அகலப் பந்தை அறிவிக்க நடுவர்கள் தங்கள் கைகளை நீட்டி அறிவிப்பர். ஆனால் இந்த நடுவர் தலைகீழாக நின்று தனது கால்களை விரித்து அறிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com